Ads Here

Wednesday, May 2, 2018

அம்மா நீ எங்கே…


Image result for அம்மா நீ எங்கே…

முட்டையோடு உடைஞ்சது. அந்தக் கோழிக்குஞ்சு தலையை நீட்டி எட்டிப் பார்த்துச்சு அங்கும் இங்கும் பாத்துச்சு. மெல்ல உடம்ப வளைச்சு நெளிச்சு முட்டைக்குள்ளேருந்து வெளியே வந்துச்சு.

இந்த உலகத்து வந்த புது ஜீவன் அது. அதுக்கு எல்லாமே புதுசா இருந்துச்சு. என் அம்மா எங்கே. அவங்க யாரைப் போலிருப்பாங்க...

அது தன்னோட பிஞ்சு கால்கள மெல்ல வச்சு நடந்து போச்சு.

நாற்காலிக்கு அடியிலே வாலைச் சுருட்டி வச்சுக்கிட்டு பூனக்குட்டி ஒண்ணு தூங்கிட்டு இருந்துச்சு. ஹலோ... ஹலோ... கோழிக்குஞ்சு பூனைக்குட்டியைக் கூப்பிட்டுச்சு. பூனை மெல்ல கண்ணத் தொறந்து பாத்துச்சு.

"ம் உனக்கு என்ன வேணும்ணு" கேட்டுச்சு.
"நீதான் என்னோட அம்மாவா? " கோழிக்குஞ்சு கேட்டுச்சு பூனக்குட்டி தன்னையும் பாத்திச்சு, கோழிக்குஞ்சையும் பார்த்துச்சு., அப்புறம் வெடுக்குணு சொல்லிச்சு.

"இல்ல இல்ல நான் உன் அம்மா இல்ல. என் ஒடம்பெல்லாம் முடியாக இருக்கு. உன் ஓடம்பிலே முடியே இல்லையே" ண்ணுட்டு மறுபடியும் தூங்கத் தொடங்கிச்சு.

கோழிக்குஞ்சு மறுபடியும் நடந்துஞ்சு... வீட்டு முற்றத்திலெ ஒரு நாய்க்குட்டி தெருவைப் பாத்து நின்னுகிட்டிருந்திச்சு. கோழிக்குஞ்சு அதுகிட்ட போச்சு. ஹலோ.. ஹலோ...
நாய்க்குட்டி திரும்பிப் பாத்துச்சு "ம் உனக்கு என்ன வேணும்? " நாய்க்குட்டி கேட்டுது.

நீதான் என் அம்மாவா? கோழிக்குஞ்சு கேட்டுது நாய் தன்னையும் பாத்துச்சு, கோழிக்குஞ்சையும் பாத்துச்சு "ம்ஹும் இல்லை எனக்கு வாலு இருக்கு உனக்கு வாலு இல்லே நான் உன் அம்மா இல்லே... " அப்படிண்ணு சொல்லீட்டு தெருவுக்கு ஒடிப்போயிருச்சு.

கோழிக்குஞ்சு பிஞ்சுகால எடுத்து வச்சு நடக்கத் தொடங்கிச்சு. தூரத்திலெ ஒரு ஆட்டுக்குட்டி இலயெ கடிச்சுகிட்டு நிக்கறதெ பார்த்துச்சு. கோழிக்குஞ்சு தன்ன பாத்து வர்றதைப் பாத்த ஆடு இல சாப்பிடறதெ நிறுத்தீட்டு "உனக்கு என்ன வேணும்" ணு கேட்டிச்சு.

"நீதான் என் அம்மாவா" ண்ணு கேட்டிச்சு கோழிக்குஞ்சு. "ஐய்யய்யே... எனக்கு நாலு காலு இருக்கு. உனக்கு ரெண்டு காலு தானே இருக்கு நான் உன் அம்மா இல்லேண்ணு சொல்லிட்டு" எலயெத் தின்னத்தொடங்கிச்சு ஆடு.

கோழிக்குஞ்சு பின்னெயும் நடந்துச்சு. அம்மாவோட ஒடம்பிலே முடியில்லே, அம்மாவுக்கு வாலில்லே, அம்மாவுக்கு ரெண்டு காலுதான் இருக்கு அப்படிண்ணு நெனச்சுக்கிட்டே நடந்துச்சு

நடந்து நடந்து ஒரு கொளத்துக்கிட்டே வந்துச்சு. அங்கே ஒரு வாத்து நின்னுகிட்டிருந்துச்சு.

கோழிக்குஞ்சு அதைப் பார்த்துச்சி. ரெண்டு காலு, உடம்பிலே முடியில்லே, அதுக்கு வாலுமில்லே. அப்ப அதுதான் என்னோட அம்மா... அப்படிண்ணு நெனச்சுகிட்டு அம்மாண்ணு கத்தீட்டு ஓடிச்சு.

வாத்து கோழிக்குஞ்சை நல்லா பாத்துச்சு. "உனக்கும் ரெண்டு காலு எனக்கும் ரெண்டு காலு. ஒன் ஒடம்புலே தூவலிருக்கு என்னோட ஒடம்பிலேயும் தூவலிருக்கு. உனக்கு வால்லிலே எனக்கும் வால்லிலே. ஆனா நான் குவாக் குவாக் ணு பேசுவேன் நீ எப்படி பேசுவே" ண்ணு கேட்டுச்சு.

கோழிக்குஞ்சு வாயை நல்லாத் தொறந்து கீ கீ கத்துச்சு. கோழிக்குஞ்சு கத்தற சத்தம் கேட்டு குப்ப மேட்டை கிளறிட்டிருந்த தாய்க்கோழி ஓடி வந்ததுச்சு.

நான் தாண்டி செல்லம் உன் அம்மாண்ணு சொல்லி கோழிக்குஞ்சுக்கு முத்தம் கொடுத்துச்சு தன றெக்கைக்கடியிலே வச்சு சூடு கொடுத்துச்சு கோழிக்குஞ்சுக்கு ரொம்ப சந்தோஷமாப்போச்சு. உங்களுக்கும் சந்தோஷமா இருக்கல்ல...

No comments:

Post a Comment