Ads Here

Wednesday, May 2, 2018

வெந்நீர் கேட்ட மீன்

Image result for வெந்நீர் கேட்ட மீன்

"வாங்க, வாங்க... நல்ல மீன் இங்கே இருக்கு, வாங்க வாங்க மீனு வாங்க வாங்க''  மீன்காரி, பாட்டியை கூப்பிட்டா. பாட்டி மீன்களைப் பார்த்துகிட்டே நடந்தாங்க.மரப்பலகைகளுக்கு மேலே மீன்கள வரிசையாக வைசச்சிருந்தாங்க. பலவகையான மீன்கள்...

பாட்டியின் பேத்தி ஆனந்தி. ஆனந்திக்கு மீன் குழம்புண்ணா ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் மீன் வாங்க வந்திருந்தா பாட்டி. 

பாட்டி மீன்களைப் பார்த்துக்கிட்டே வந்தாள். அதில் ஒரு மீன் பாட்டியையே பார்ப்பது போல் இருந்திச்சு. பாட்டி அந்த மீனுக்குப் பக்கத்துக்குப் போனா. அந்த மீனைப் பார்த்தாள். அதோட பெரிய கண்கள் பாட்டியையே பாக்கறமாதிரி இருந்திச்சு. பாட்டி அந்த மீனை வாங்கினாள். வீட்டுக்கு வந்தாள். ஆனந்தி வர்றதுக்குள்ளே மீனைக் கழுவி வைக்கலாம்ணு நெனச்சா மீனைக் கல்லில வைச்சு தேய்க்கப் போனாள் "பாட்டி, பாட்டி என்னைத் தேய்க்காதே! என் உடம்பு வலிக்குது...''  அப்படீண்ணு மீன் பேசிச்சு.

என்ன பேச்சுச் சத்தம். அப்படீண்ணு பாட்டி அங்கயும் இங்கயும் பாத்தாங்க. ஆனா யாருமில்லேண்ணு நெனச்சுகிட்டாங்க. மறுபடியும் மீனை கல்லிலெ வச்சு தேய்க்கப்போனாங்க.

"பாட்டி பாட்டி எம் ஒடம்பு வலிக்குது என்ன தேய்க்காதீங்க" மீனு சத்தமாக கத்திச்சு.

"ஓஹோ! நீ தான் பேசினாயா?''  பாட்டி கேட்டா.

"ஆனந்தி வர்றதுக்குள்ள கொழம்பு வைக்கணும் உன்னை வெட்டித் துண்டு போடறப்போறேன்" அப்படீண்ணு பாட்டி கத்தியை எடுத்தா. 

"என்னை விட்டிடு பாட்டி. அந்தத் தண்ணீர்த் தொட்டியில் போடுங்க'' மீன் கெஞ்சிக் கேட்டுச்சு. பாட்டி மீனைப் பார்த்தாள். பாவம்ணு நெனச்சா. தண்ணீர்த் தொட்டியில் விட்டுட்டா.
சாயுங்காலமாச்சு. வேலைக்குப் போன ஆனந்தி திரும்பி வந்தாள். மீனைப் பார்க்க வேகமாக ஓடினாள். ஓடும்போது வாழைப் பழத்தோல மிதிச்சா. வழுக்கி விழுந்தா. அவ காலு. கால் ஒடிஞ்சு போச்சு.

"ஐயோ! அம்மா!!''  என்றபடி அங்கேயே ஊட்கார்ந்தாள். கண்களில் தண்ணீர் பொல பொலண்ணு கொட்டிச்சு. அதைப் பார்த்த பாட்டியும் அழுதாள். வண்டி வைச்சு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போனா.

மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தாங்க. ஆனால் அவளால் முன் போல நடக்க முடியாது. நொண்டி நொண்டித்தான் நடக்க முடியும்ண்ணு சொல்லீட்டாங்க வீட்டல வந்த ஆனந்திக்கு ஒரே வருத்தமா பேச்சு. வேலைக்கும்போக முடியல. வெளியிலயும் போக முடியல. ச்சே ஏன் வாழ்க்கை இப்படியாச்சேண்ணு அழுதா.

நாட்கள் வாரங்களாச்சு. வாரங்கள் மாதங்களாச்சு. மாதங்கள் வருடங்களாச்சு ஆனந்திக்கு கல்யாணம் பண்ணனும் பாட்டி நெனச்சாங்க. பலபேருகிட்ட சொல்லிவைச்சாங்க.

ஆனந்தியைப் பெண் பார்க்க பலபேர் வந்தார்கள். ஆனால் "நொண்டிக்காரியை வேண்டாம்'' ணு சொல்லிட்டு போய்ட்டாங்க.

ஒருநாள் காலை நேரம். "ஆனந்தி, ஆனந்தி'' ணு யாரோ அன்பாக கூப்பிடற சத்தம் கேட்டுச்சு. ஆமா. தொட்டில கெடக்கிற மீன்தான் ஆனந்தியை கூப்பிட்டுச்சு ஆனந்தி நொண்டி நொண்டி மெல்ல தொட்டிக்கருகே போனா

"ஆனந்தி நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ" அப்படீண்ணு மீன் சொல்லிச்சு. ஆனந்தி யோசித்துப் பார்த்தாள். யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறாங்க. இந்த மீனையாச்சும் கல்யாணம் செய்துக்குவோம்ணு முடிவு செய்தாள். மீனுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் நடந்திச்சு.

ஒருநாள் ஆனந்தி முல்லை மாலை கட்டிட்டிருந்தாள். என் வாழ்க்கை இப்படியாயிருச்சேண்ணு நெனச்சு அழுதாள். கடவுள வேண்டிக்கிட்டா மனம் வருந்தி கை கூப்பி அழுதாள். அப்ப "ஆனந்தி ஆனந்தி''  என அன்பான குரல்ல மீன் கூப்பிட்டுச்சு.
"என்னங்க''  என்றபடி தொட்டியின் அருகே சென்றாள்.
"கொஞ்சம் வெந்நீர் வைச்சுத் தருவியா? குளிர்ந்த நீரில் குளிச்சுக் குளிச்சு போதும் போதும்ணாயிருச்சு''  மீன் பேசியது. ஆனந்தியும் சரிணு அடுப்பை மூட்டினாள். வெந்நீர் வச்சா. ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி மீனோட அருகே வைச்சா ஒரு குவளையிலெ வெந்நீர் எடுத்து ஊற்றினாள். அவ்வளவுதான் வெந்நீர் பட்டதும் மீனோட உடம்பு கரைஞ்சு விழுந்திச்சு. 

அங்கிருந்து பளிச்சென வெளிச்சம் வந்திச்சு. ஆனந்தியோட கண்ணெல்லாம் கூசிச்சு.

அவ கண்களை மூடிக்கிட்டா. முல்லைப் பூ வாசம் அங்கே பரவிச்சு. ஆனந்தியை யாரோ தொடறது மாதிரி இருந்திச்சு. அவள் மெல்ல கண்ணத் திறந்தாள். அவளுக்குத் அவளோட கண்களை நம்பவே முடியலை.

அங்க அந்தத் தொட்டிக்குப் பக்கத்திலெ அழகான இளவரசன் ஒருவன் நிண்ணுகிட்டிருந்தான். அவன் ஆனந்தியைப் பார்த்துச் அழகாச் சிரிச்சான். ஆனந்திக்கு சந்தோஷம் தாங்க முடியலை. எம் புருஷன் ஒரு மீன் இல்லை. அவர் ஓர் இளவரசண்ணு நெனச்சு சந்தோஷப்பட்டா.

இளவரசன் சிரிச்சுகிட்டே ஆனந்தியோட நொண்டிக்காலைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! கால் குணமாகிருச்சு. ஆனந்தியோட மகிழ்ச்சிக்கு ஆளவே இல்லை.

அவள் அப்படியே புருஷனோட தோள் மேல சாஞ்சுகிட்டா. அப்புறம் இளவரசன் ஆனந்தியையும் பாட்டியையும் ஆழ்கடல் மாளிகைக்கு கூப்பிட்டுப் போனான். அங்கு அவங்க ரொம்பா காலம் சுகமாக வாழ்ந்தாங்க.

No comments:

Post a Comment