Ads Here

Tuesday, October 29, 2019

Tirupati laddu

                  திருப்பதி லட்டு

கண்ணன் என்னும் ஏழை இளைஞன்
திருப்பதிக்குச் சென்றான். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனம் முடித்த அவன் லட்டு வாங்க
வரிசையில் நின்றான்.
பணக்காரர் ஒருவர் நான்கு லட்டுகளுடன்
செல்வதைக் கண்டான்.



ஏழையான அவனால் ஒரு லட்டு தான் வாங்க முடிந்தது. வருந்திய அவன்
வழியில் துறவி ஒருவரைக் கண்டான்.
பார் ''சுவாமி! பணக்காரர்களால் தாம் நினைச்சதை எல்லாம் செய்ய முடிகிறது.

ஏழையாக பிறந்த எனக்கு திருப்பதி லட்டைக் கூட இரண்டாக வாங்க முடியவில்லையே?''
எனக் கேட்டான்.
"மகனே! பணக்காரர் நாலு லட்டு வாங்கலாம்.

ஆனால் சர்க்கரை வியாதியுள்ள அவரால் அதை
சாப்பிட முடியுமா? தன் உறவினர், நண்பர்களுக்கு கொடுக்கவே வாங்கியுள்ளார்.

தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பதே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. நீயும் பிறருக்கு கொடு!
அது மட்டுமல்ல! இதில் இன்னொரு தத்துவமும் உள்ளது.


அமிர்தம் போல இனிக்கும் லட்டை கொஞ்சம் தின்றதும் இன்னும் கிடைக்காதா என மனம் ஏங்கும். கடவுளின் கருணையும்
அப்படியே. பெருமாளின் அருளுக்காக ஒவ்வொரு பக்தனும் உலகில் ஏங்குகிறான். நீயும் முடிந்தளவு
பிறருக்கு பகிர்ந்து கொடு . கடவுளின் அருள் கிடைக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment