Ads Here

Friday, November 22, 2019

A Tailor and a elephant

      தையல்காரரும் யானையும்

   ஒரு ஊரில் ஒரு தையற்காரன் இருந்தான். அந்த தெருவின்
முனையில் கோயில் ஒன்று இருந்தது. அந்த கோவிலில் யானை
ஒன்றும் இருந்தது.



   தினமும் கோயில் யானை குளிக்கச் செல்லும் முன்
தையற்கடையின் முன்னே வந்து நிற்கும். தையற்காரனும் யானை
உண்பதற்கு பழங்கள், தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பான்.
யானையும் அவனுக்கு ஆசிர்வாதம் வழங்கிவிட்டுக் குளிக்கச் செல்லும்.
மேலும், அந்தத் தையற்காரனுக்கு யானை பல வேளைகளில் பல
உதவிகளும் செய்து வந்தது.

For English click here

    ஒரு நாள் அந்த தையற்கடைக்காரனுக்கு  தீய என்னம்
தோன்றியது. வழக்கம் போல கோயில் யானை அவன் கடையின்
முன்னே வந்து நின்றது. அவன் யானைக்கு பழம் எதையும்
உண்ணக் கொடுக்காமல், தான் துணி தைப்பதற்கு வைத்திருந்த
ஊசியால் யானையின் தும்பிக்கையில்  சுருக்கென்று குத்தி
விட்டான்.


   யானையும் தையற்காரன் செய்ததை மனதில் பதிய
வைத்துக் கொண்டு குளிக்கச் சென்றது. அது ஆற்றில் குளித்து
முடித்த பின், சேறு நிரம்பிய  இடத்திற்குச்  சென்று, சேற்றை தனது
தும்பிக்கையில் நிறைய நன்றாக உறிஞ்சி வைத்துக் கொண்டது.
யானை மீண்டும் திரும்பி வரும் வழியில் தையற்கடையின்
முன்னே வந்து நின்றது. தையற்காரனோ யானை எதற்காக வந்து
நிற்கிறது என்பது புரியாமல், துணிகளைத் தைப்பதில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தான். அது பண்டிகைக் காலமாக இருந்ததால் அவன்
நிறைய புதிய துணிகளைக் கடைக்குள் வைத்திருந்தான்.
தையற்காரன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் யானை
தனது தும்பிக்கையிலுள்ள சேற்றை, கடையிலுள்ள துணிகளில்
எல்லாம் வாரி இறைத்தது. தையற்காரனின் கடையில் வைத்திருந்த  துணிகள் எல்லாம் சேறு பட்டு வீணாகிப்போனது.



  தான் செய்த தவறுக்கு தக்க தண்டனை இது என்று
தையற்கடைக்காரன் புரிந்து கொண்டான்.


நீதி: பிறருக்குத் தீமை செய்தால் தீமையே வந்து சேரும்.

No comments:

Post a Comment