Ads Here

Sunday, November 24, 2019

Sorgam || Tamil stories for kids

               சொர்க்கமும் நரகமும்

   பூமியில் வாழ்ந்த காலத்தில் தானமும் தர்மமும் செய்த அந்த செல்வந்தர் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு 'நரகம் எப்படியிருக்கும்?' என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.


   அவர் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்த தேவதூதர்களிடம் தன் ஆசையைக் சொன்னார். தேவதூதர்களும் அவரை அழைத்துச் சென்று நரகத்தைக் காட்டினார்கள்.

   செல்வந்தர் கற்பனை செய்து வைத்திருந்தபடி நரகம் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. அங்கே சித்திரவதைகளும் இல்லை. ஆங்காங்கே வட்ட வட்டமாக சாப்பாட்டு மேஜைகள். அவற்றைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கைகளில் நீளமான கரண்டிகள். மேஜையின் மையத்தில் பெரிய அண்டா. அதன் அடி
ஆழத்தில் அமுத பானம் இருந்தது. அதன் சுவையே நாக்கில் எச்சில் ஊற வைத்தது. ஆனாலும் நரகத்தில் இருந்தவர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல எலும்பும் தோலுமாய் இருந்தார்கள்.

சிட்டுக் குருவியின் சாமர்த்யம் click here

   அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருக்கும் போல் தோன்றியது. அவர்கள் சக்தியற்றவர்களாய், கரண்டியை அந்த அண்டாவில் விடுவதும், அள்ளிய அமுதத்தை குடிக்க முடியாமல் தடுமாறுவதுமாய் இருந்தனர். கரண்டியின் கைப்பிடி நீளமாக இருந்ததால், கைகளை மடக்கினாலும் அமுதம் வாயை எட்டவில்லை. அழுகையும் எரிச்சலும் சண்டையுமாக ஒவ்வொரு மேஜையிலும் முயற்சி தொடர்ந்தபடி இருந்தது.



   செல்வந்தர் இதைப் பார்த்து வேதனைப்பட, “நீங்கள் போக வேண்டிய சொர்க்கத்தைப் பார்க்கலாம், வாருங்கள்!” என்று அழைத்தான் தேவதூதன். அது நரகத்தின் அருகிலேயே இருந்தது. செல்வந்தர் நடந்தார்.

FOR English click here

   என்ன ஆச்சரியம்?! சொர்க்கத்தும் நரகத்துக்கும்
ஒரு வித்தியாசமும் இல்லை. நரகத்தில் இருப்பதைப் போலவேஅண்டா, நீளமான கரண்டி, அமுத பானத்தின் அற்புத மணம் இங்கே மனிதர்கள் புஷ்டியாகக் காணப்பட்டார்கள் அண்டாக்களின் அருகில் நெரிசல் ஏதும் இல்லை.

   இது எப்படி? ஒரு மேஜையை உற்று கவனித்த
செல்வந்தருக்குப் புரிந்தது.....



   அண்டாவின் அடி ஆழத்தில் இருக்கும் அமுதத்தை
கரண்டியால் எடுக்கும் ஒருவர், அதை தனக்கு எதிரே
இருப்பவருக்கு ஊட்டுகிறார். அவர் பதிலுக்கு இவருக்கு
ஊட்டுகிறார். நீளமான கரண்டியால் இது மட்டுமே சாத்தியம். சுயநலம் இல்லாத எண்ணம்தான் இந்த இடத்தைச் சொர்க்கம் ஆக்கியிருக்கிறது என்பதை உணர்ந்தார் அவர்.


நீதி: எதையும் கொடுப்பவர்களே எல்லாவற்றையும்
பெறுகிறார்கள்

No comments:

Post a Comment