Ads Here

Saturday, November 30, 2019

கர்வமுள்ள ரோஜா || Tamil stories for kids

              ரோஜாவின் தலைக்கனம்

   ஒரு மழைக் காலத்தின்  கடைசியில், காட்டுக்குள் இருந்த
அந்த ஒரு ரோஜாச் செடியில் அழகான சிவப்பு  வண்ண ரோஜா
ஒன்று பூத்தது குளுங்கியது. அதன் அழகு அருகிலிருந்த
அனைத்து மரங்களையும்,செடிகளையும் கவர்ந்து இழுத்தது.
"உன்னைப் போன்ற அழகும் இனிமையும் எனக்கு இல்லையே!"
என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டது  அந்த ரோஜா செடியின் அருகில் இருந்த வேப்ப மரம் ஒன்று.




  “கவலைப்படாதே! எல்லோருக்கும் எல்லாமும் நமக்கு
கிடைப்பதில்லை” என்று வேப்ப மரத்திற்கு ஒருஆறுதல்  கூறியது  பக்கத்திலிருந்த இன்னொரு மரம். மற்ற மரங்களும் செடிகளும் ரோஜாவின் அழகைப் பார்த்து விட்ட பெருமூச்சுகள் காற்றில் கலந்தன. இதனால் தலைக்கனம் ஏறிய ரோஜா, "இந்தக் காட்டில் யாரும் என்னைப் போல  யாரும் இல்லை”என்று பெருமையாக பேசிக் கொண்டது.



   அப்போது அதன் அருகில் இருந்த சூரியகாந்தி, “அப்படிச் சொல்லாதே.. இந்தக் காட்டில் எல்லோருமே அழகு! நீயும் அதில் ஒன்று" எனறு சொன்னது.

Sparrow story click here

   ரோஜா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தது ரோஜாசெடி. அதன் கண்ணில் அருகிலிருந்த கள்ளிச்செடி ஒன்று தென்பட்டது. உடனே அது தலைகனத்தில் பேச துவங்கியது "இந்தக் கள்ளிச்செடியைப் பார். உடம்பு முழுக்க முட்களோடு எவ்வளவு அவலட்சணமாக இருக்கிறது. இதையுமா அழகு என்கிறாய்?"  என்று ரோஜா சூரியகாந்தியிடம் கேட்டது.

For English click here

   "உன்னிடம் கூடத்தான் முட்கள் இருக்கிறது. எது அழகு
என்பதை யாரும் வரையறுக்க முடியாது'' என்றது சூரியகாந்தி.
இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து கொண்டே இருந்தது.
"உனக்கு என் மேல் பொறாமை. அதனால் தான் இப்படிக் கூறுகிறாய்” என்றது ரோஜா. கூடவே கள்ளிச்செடியை எவ்வளவு ஏளனம் செய்ய முடியுமோ அவ்வளவு ஏளனம் செய்தது. ரோஜா செடி. கள்ளிச்செடி அதற்காகக்  கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஆனால் அது ரோஜாவிடம் "இறைவன் எந்த உயிரையுமே காரணமில்லாமல் படைக்கவில்லை” என்று மட்டுமே சொன்னது தன்னடக்கத்துடன்.



   மழைக்காலம் முடிந்து கோடை காலம் வந்தது. மழையின்றி
காட்டில் இருந்த எல்லாச் செடிகளுமே தவித்தன. ரோஜாவும் வாடி வதங்கியது.

தையல் காரரும் யானையும் click here

   ஒருநாள் அங்குவந்த சில சிட்டுக்குருவிகள் கள்ளிச்செடி
அருகே சென்று அதைக் கொத்திக் கொண்டிருந்தன. ரோஜா செடி அதை பார்த்து விட்டு சூரியகாந்தியிடம் கேட்டது. அதற்கு
சூரியகாந்தி ரோஜாவிடம், "கள்ளிச்செடியின் சதைப்
பிடிப்பான கிளைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்
அதைக் குடிக்கத்தான் குருவிகள் அதைக் கொத்து கின்றன. இந்த
நேரத்தில் குருவிகளுக்கு கள்ளிச்செடிகள் மட்டுமே அழகாகக்
தெரியும்!” என்றது. ரோஜாவும் உண்மையைப் புரிந்து கொண்டது. தான் பேசியது தவறு என்று புறிந்து கொண்டு தலைகுணிந்தது.

நீதி: வெளித்தோற்றத்தை வைத்து யாரையும்
எடைபோடக் கூடாது.

No comments:

Post a Comment