Ads Here

Friday, December 6, 2019

பாட்டி சொன்ன கதை || story of grandma

               மூதாட்டி சொன்ன நன்றி

   ஒரு நியாயவிலை கடை வரிசையில் அரிசி வாங்க பலர்  நின்று
கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் ஒரு வயதான  பாட்டியும்
நின்று கொண்டிருந்தாள். மூதாட்டியின் பின்னால் நின்று கொண்டிருந்தவர்
மூதாட்டியிடம், “பாட்டி! எனக்குக் கொஞ்சம் அவசரமாக வெளியில் போக
வேண்டும். உங்களுக்கு சற்று தாமதமாக  சென்றால்
போதுமென்றால் என் பின்னால் வந்து நின்று கொள்ளுங்கள்.
நான் முதலில் அரிசியை வாங்கிவிட்டு சென்றுவிடுகிறேன்”
என்று சொன்னார்.



   அந்த மூதாட்டியும் "நன்றி!" என்ற ஒற்றை வார்த்தையை
சொல்லிவிட்டு அவரின் பின்னால் வந்து நின்று கொண்டாள்  அந்த பாட்டி.
இதைக் கவனித்த பாட்டியின் பின்னால் நின்றிருந்த

சொர்கமும் நரகமும் click here

இன்னொருவரும் அதேபோல் கேட்க, பாட்டியும் "நன்றி! என்ற
ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு பின்னால் வந்து நின்று
கொண்டாள். இப்படி பாட்டியின் பின்னால் நின்று
கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பாட்டியை பின்
தள்ளிவிட்டு முன்னேறிச் சென்றார்கள்.

கர்வமுள்ள ரோஜா click here

   ஒவ்வொரு முறையும் பாட்டியும் ‘நன்றி' என்ற ஒற்றை
வார்த்தையைச் சொல்லிவிட்டு பின்னால் போக வரிசையின்
கடைசி ஆளாக  வந்துவிட்டாள்.

   இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் பாட்டியிடம்
போய், “பாட்டி! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆட்கள்
உங்களிடம் வந்து உங்கள் இடத்தை கேட்டபோது நன்றி என்ற
ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு இடம் தந்தீர்கள். நீங்கள்
இடம் கொடுத்ததற்காக அவர்கள் அல்லவா நன்றி சொல்ல
வேண்டும். ஆனால் நீங்கள் நன்றி சொன்னீர்களே அதற்கு
அர்த்தம் என்ன?” என்று கேட்டான்.



   அதற்கு அந்த பாட்டியோ, "அவர்கள் எனக்கு நன்றி
சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு முறை என்னை பின்னால்
போகச்சொல்லிவிட்டு ஒவ்வொரு ஆட்களும் முன்னேறி
செல்லும்போதும் ஒரு ஆளுக்கு நான் உதவி செய்ய முடிந்ததே.
அந்த வாய்ப்பை எனக்குத் தந்த கடவுளுக்கு நான் நன்றி
சொன்னேன்!" என்று பதில்  கூறினால்.


நீதி: பிறர்க்கு உதவி செய்ய வாய்ப்பு வரும்போது
கடவுளுக்கு நன்றி செலுத்தக் கிடைத்த வாய்ப்பாகக்
கருதி அவ்வுதவியை மனமுவந்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment