Ads Here

Wednesday, May 6, 2020

படிப்பு கற்று தந்த பாடம்

           படிப்பு கற்று தந்த பாடம்

ஒரு முதியவர் தேவாலயத்தில் மணியடிக்கும் வேலை செய்து வந்தார். தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும்பத் தொழில் அதுதான். பாட்டனார், அப்பாவுக்குப் பிறகு இப்போது அறுபது வயதில் இவர் மணியடித்துக் கொண்டிருந்தார். அப்போது புதிதாகப் பதவியேற்ற இளம் அரசர் ஒரு சட்டம் கொண்டு வந்தார்.



அதன்படி இந்தந்த வேலை செய்பவர்கள், குறிப்பிட்ட படிப்பைப் படித்திருக்க வேண்டும் என்று முடிவாகியது. அதன்படி,
கோயிலில் மணி அடிக்கக் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் என்று ஆணை வருகிறது. பள்ளிக்கூடத்தின் பக்கமே எட்டிப் பார்க்காத முதியவரின் வேலை பறி போனது.

அறுபது வயது. படிப்பு வாசளை இல்லை. கோயிலில் மணியடிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது.

முதியவர் நிலைகுலைந்து போனார். அடுத்து என்ன செய்வது?

யோசித்தவாறே தெருவில் நடக்கிறபோது, ஒரு இளநீர் குடித்தால் நன்றாக இருக்குமே என்று அவருக்குத் தோன்றியது. அவர் இளநீர் கடையைத் தேடினார்.



நான்கு திசைகளிலும் வெகுதூரத்திற்கு ஒரு இளநீர் கடை கூட இல்லை. என்னை மாதிரி எத்தனை பேர் இப்படி இளநீருக்கு அலைவார்கள் என்ற யோசனையில் வீடு போகிறார். சேர்த்து வைத்திருந்த கொஞ்சம் பணத்தில் சின்னதாக ஒரு இளநீர் கடை தொடங்கினார். அவருக்கு நல்ல வியாபாரம் ஆனது.

அதற்குப் பிறகு முதியவருக்கு ஒரே வேலைதான். ஒவ்வொரு இடமாகப் போய், எங்கெல்லாம் இளநீர் கடை இல்லையோ, அங்கே ஒரு இளநீர் கடையைத் திறந்தார். இப்படியே சில வருடங்களில் ஒரு பெரிய முதலாளியாக வளர்ந்துவிட்டார். நிறைய பணமும் சம்பாதித்து விட்டார்.

ஒருநாள் அவருடைய நண்பர், 'இவ்வளவு பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளக் கூடாது. வங்கியில் போட்டு வைத்தால் பணம் பத்திரமாக இருக்கும்' என்று அறிவுறுத்தினார்.

கர்வமுள்ள ரோஜா click here

அதன்படி முதியவரும் வங்கியில் கணக்கு துவக்கச் சென்றார்.

முதியவரின் விருப்பத்தை அறிந்த வங்கி மேலாளர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் நம் வங்கியில் கணக்கு துவங்க வந்திருக்கிறார் என்று முதியவரை நன்கு உபசரித்தார். விண்ண ப்பப் படிவத்தை எடுத்து, “பெரியவரே!

இதில் ஒரு கையெழுத்து மட்டும் போடுங்கள்" என்று கூறினார்.
முதியவரோ சிரித்தபடியே, "எனக்கு கையெழுத்து போடத் தெரியாது" என்றார். அதைக் கேட்ட வங்கி மேலாளருக்கு மிகுந்த ஆச்சரியாக இருந்தது.

அவர் முதியவரிடம், “ஐயா! நீங்க பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லையா? படிக்காமலேயே இவ்வளவு சம்பாதித்து இருக்கிறீர்களா? நீங்கள் படித்திருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள்" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

முதியவரோ சிரித்துக் கொண்டே கோயில் மணியடித்துக் கொண்டு இருந்திருப்பேன்!" என்று பதில் சொன்னார்.

கதை சொல்லும் நீதி:

நமது பலம் என்ன என்று அறிய முற்படும் போது தான், நமது எல்லைகள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment