Ads Here

Wednesday, May 2, 2018

குழந்தைகளிடம் வீம்பாகப் பேசிய பேராசிரியர்


Image result for குழந்தைகளிடம்

சோணியா எப்போதும் எதாவது செஞ்சிட்டேயிருப்பா. அவ சும்மா இருந்து யாரும் பார்த்ததேயில்ல. அவ கையிலே எதாவது பொருள் இருந்திட்டே இருக்கும்.

அத வச்சு எதாவது ஒரு பொருள் செய்வா. அல்லது அறிவியல் பரிசோதனைகள் செய்வா.

ஒருநாள் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குப்பியை எடுத்து வந்தாள். ஒரு கம்பியை எடுத்தாள். அதன் நுனியை நல்ல சூடாக்கி பிளாஸ்டிக் குப்பியின் அடியில் பத்துப் பதினைத்து துவாரங்கள் இட்டாள். ஒரு வாளியில் தண்ணீர் எடுத்தா. வீட்டில் உள்ளவரை எல்லாரையும் கூப்பிட்டா.

"ஒ இவ இன்னைக்கு புதுசா ஏதோ கண்டுபுடிச்சிருக்கா'' அப்படீண்ணு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. என்ன சோணியா இன்னைக்கு என்ன மந்திரம்
பண்ணப்போறே...'' அப்படீண்ணு கேட்டுக்கிட்டே சோணியாகிட்டா வந்தாங்க. "நான் நினைச்சா மழை பெய்யும். பாக்கறீங்களாண்ணு கேட்டுகிட்டு அந்தப்
பிளாஸ்டிக் குப்பியை வாளியில் மூழ்கச் செய்து ஒரு கப்பால அதில் நிறைய தண்ணீர் எற்றினா. பிறகு அந்தக் குப்பிடைய மூடினா. அந்த குப்பியை வெளியே எடுத்து " ஒ மழைக்கடவுளே. இப்ப மழைபெய்யணும்'' அப்படீண்ணு சொல்லீட்டே குப்பியோட மூடியைத் திறந்தா. அதிலிருந்து தண்ணீர் மழைபோல கொட்டிச்சு.

"நீ மூடியைத் திறந்த. அதனாலே காத்து உள்ளே போச்சு. தண்ணீரை தள்ளிச்சு. அதனாலேதான் தண்ணீ மழைபோலக் கொட்டிச்சு'' அப்படீண்ணு அவளோட தம்பி சோணு சொன்னான்.

அதுக்கு சோணியா "இப்படி நீ சொல்லுவேண்ணு எனக்குத் தெரியும். இப்போபாரு'' அப்படீண்ணு குப்பியை மூடினா. "ஒ... மழைக்கடவுளே இப்பே மழை பெய்யணும்'' அப்படீண்ணு சொன்னா. குப்பியிருந்து தண்ணீ கொட்டிச்சு. தம்பியும் மீதியுள்ளவங்களும் ஆச்சரியத்தாலே வாயைப் பொளந்து பாத்திட்டே இருந்தாங்க.

அவ கும்பியை மெல்ல அழுத்தியதை யாரும் பாக்கலயே. இதுதான் சோணியா. இதுக்கு சோணியா நாலாம் வகுப்புலதான் படிக்கிறா. ஒரு நாள் அவ ஒரு மெழுகு திரியை வச்சு ஏதோ பரிசோதனை செய்திட்டிருந்தா.

அப்ப அவங்க அப்பாவைப் பாக்க ஒரு பேராசிரியர் வந்தாரு. அவரு கல்லூரியிலே அறிவியல் கற்பிக்கிறவரு. சோணியாவோட அப்பாகூடப் பேசிட்டிருந்தவரு சோணியா மெழுகுவத்தியைப் பத்தவைக்கிறத பாத்தாரு.

அந்தப் பெரிய பேராசிரியர் சோனியா கிட்ட வெளையாடலாம்ணு நெனச்சாராணு தெரியல. நேரா அவ கிட்ட போயி "பாப்பா என்ன பண்ணீட்டிருக்கே'' அப்படீண்ணு கேட்டாரு.

பாத்தா தெரியலையா? மெழுகுவத்தியைப் பத்த வைச்சிட்டிருக்கேன்.

சரி பக்கத்திலே சார்ட் காகிதம் எல்லாம் கெடக்குது எதுக்கு நான் காகிதப் பாத்திரத்திலெ தண்ணீ சூடாக்கப்போறேன்.

பேராசிரியர் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டாரு.

எப்படி?

ஒரு பத்து நிமிஷம் இருங்க செய்து காட்டறேன் சொன்னா சோணியா.

சார்ட்டு பேப்பரோட நாலு ஓரங்களையும் உள்ள பாத்து மடக்கி ஸ்டாப்ளர் பின்னாலே ஓரங்களை இணைச்சு காகிதப் பாத்திரம் செஞ்சா.

எல்லோருமா வாங்க... அப்படீண்ணு கூப்பிட்டா மொதல்லா அந்தப் பேராசிரியர்தான் எந்திருச்சு வந்தாரு.

சோணியா கீழே கெடந்த ஒரு சார்ட்டுத் துண்டைக் கையிலெ எடுத்தா?

"இப்ப இந்தக் காகிதம் எந்தன நொடியில் தீப்பிடிக்குதுண்ணு பாருங்க''

அப்படீண்ணு சொல்லிட்டே எரியுற மெழுகுவத்தியிலே அதக் காட்டினா. அது ஒரு நொடியில பத்திகிச்சு.

பிறகு காகிதப்பாத்திரத்திலெ சிறிதளவு தண்ணி ஊத்தினா. இப்ப இத நான் எரியற மெழுகுவத்திக்கு மேலாகப் பிடிக்கப்போறேன். ஒரு நொடியில் தீப்பிடிக்காத பாருங்க''

அப்படீண்ணு சொல்கிட்டே தண்ணீ ஊத்தின காகிதப் பாத்திரத்தை சுடருக்கு மேலே புடிச்சி. ஆனா என்ன அதிசயம் காகிதம் தீப்பிடிக்கல. ஆச்சு நிமிஷம் ஆச்சு.

ரெண்டு நிமிஷம் ஆச்சி அஞ்சு நிமிஷம் ஆச்சு. ஆனா காகிதம் தீப்பிடிக்கல. உங்கள்ல யாருக்காவது சந்தேகம் இருந்தா தண்ணீயைத் தொட்டுப் பாக்கலாம்ணு சோணியா சொல்ல பேராசிரியர் தொட்டுப் பாத்தாரு. ஆமா தண்ணீ சூடாக இருக்குண்ணு சொன்னாரு.

எல்லாரும் தொட்டுத் தொட்டுப் பாத்தாங்க. அவ தம்பி சோணு "இனிமே தண்ணி சூடாக்கப் பாத்திரம் வேண்டா காகிதம் போதும்ணு கை தட்டிச் சிரிச்சான்.

அந்தப் பேராசிரியர் தனக்கும் அறிவியல் தெரியம்ணு காட்டணும்ணு நெனச்சாரா தெரியல. "'சோணியா, ஏங்க நான் கேக்ற கேள்விக்குப் பதில் சொல்லு பாக்கலாம்ணு சொன்னாரு. சோணியாவோ கேளுங்க, எனக்குப் பதில் தெரிஞ்சா சொல்றேன்ணு சொன்னா.

இந்த மெழுகு வத்தியில் இருக்கற சுடர் எங்கிருந்து வந்தது. அப்படீண்ணு கேட்டாரு.

இது எல்லாருக்கும் தெரியுமே. தீப்பெட்டியிருந்து வந்திச்சு.

தீப்பெட்டிக் குச்சிக்கு ஏங்கிருந்து வந்துச்சுணு கேட்டாரு. சோனியா யோசிக்கறதைப் பாத்த அவருரோட மொகத்திலெ மெல்லிசா
ஒரு புன்சிரிப்பு வந்திச்சு சோணியாவை மடக்கிட்டதா நெனச்சிருப்பாருபோல.

சோணியாவுக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியலே. அவ ஒரு நிமிஷம் யோசிச்சா.

ப்பூண்ணு மெழுகுவத்தியோட சுடரை ஊதி அணைச்சா. அப்புறம் அந்தப் பேராசியரைப் பாத்து "இப்ப அந்தச் சுடர் எங்கே போச்சுண்ணு சொல்லுங்க. அது எங்கிருந்து வந்திச்சுண்ணு நான் சொல்றேன். அப்படீண்ணா

அவ்வளவுதான் எல்லோரும் சிரிச்சாங்க . பேராசிரியருக்கு என்ன சொல்லறதுண்ணு தெரியல. அவரு நைசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு "சுட்டிப் பொண்ணு''
அப்படீண்ணு தட்டிக்குடுத்தாரு.

ஆனா அவ மனசில இனிமே குழந்தைககிட்ட பேசும்போது பாத்துப்பேசணும்ணு நெனச்சாரு.

No comments:

Post a Comment