Ads Here

Wednesday, May 2, 2018

வேண்டாம் தாங்க மாட்டீங்க…


Image result for சேவல்

அன்னைக்கும் வழக்கம்போல சேவல் கூவிச்சு. கீழ்வானம் சிவந்திச்சு. பறவைகெல்லாம் இற தேடிப் பறந்திச்சு.

ஆனா ரவியாலே எந்திருக்க முடியவில்லை. காலை தூக்க முயற்சி செய்தான் ஆனா அசையல, கையும் அதே மாதிரித்தான். இமைகள் அசைஞ்சாத்தானே கண்களைத் திறந்து பாக்க முடியும். உதடுகள் பிரிஞ்சாத்தானே பேசமுடியும். கை கால், கண்ணு வாய் எதுவும் வேலை செய்யல காது மட்டும் லேசா வேலை செஞ்சுது அதனாலெ காத்து வீசற சத்தம் கேட்குது, பறவைக கத்தறது லேசா கேட்குது. ரவி நம்ம கத முடிஞ்சுது அப்படீண்ணு நெனச்ச ரவி அமைதியாப்படுத்திருந்தான். அப்போ யார் யாரோ சண்டை போடற சத்தம் மெல்லமா கேட்டுச்சு.

அவன் காதுகள இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கிகிட்டான். "இங்க பாருங்க, நீங்க எல்லாம் என்னதான் சொன்னாலும் சரி உங்களயெல்லாம்
நான்தான் சொமந்திட்டிருக்கின். நான் இல்லேண்ணா நீங்க இல்ல. நல்லா புரிஞ்சுக்குங்க. ரவி நடக்கறது வௌயாடறது எல்லாம் என்னாலதான். அதனாலே நான்தான் பெரியவன். எனக்கு முன்னாடி நீங்க எல்லாம் ஒண்ணுமில்லை'' கால்கள் வீராப்போடு பேசிச்சுக.

"கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் இல்லாட்டி ரெவி எங்காவது குண்டு குழியில,

கெணத்துல கொளத்தில விழுந்திடுவான். நான் இல்லேண்ணா எப்படி ரவியாலே வௌயாடு முடியும்? என் உலகத்தையே பாக்க முடியாதே. அதனாலே நான் சின்னதா இருந்தாலும் நான்தான் ரவிக்கு ரொம்ப ரொம்ம முக்கியமானவன்'' கண்கள் பேசிச்சுக.

"இங்க பாருங்க, எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கணும். பள்ளிக்கூடம் போறது படிக்கறதுக்காக, வௌயாடுறதுக்கா, அதுக்கு நான் வேணும், எதாவது பொருளை எடுக்கணுமா? நான் வேணும். எழுதணுமா நான் வேணும். சாப்பிடுணுமா நான் வேணும். மட்டுமல்ல கால் கைகள் கழுவுண்ணு யாரும் சொல்ல மாட்டாங்க, கை கால்கள்தான் சொல்லுவங்க. நான்தான் உங்களையெல்லாத்த விடவும் பெரியவன்'' கை வீம்பாப் பேசிச்சு.

"ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. உங்களயெல்லாம் வேலை செய்ய வைக்கறதே நான்தான் நா இல்லாட்டி உங்களுக்குச் சாப்பாடு இல்ல. அதுமட்டுமா? ஒரு மனுஷனாலெ தனியா வாழ முடியாது. வீட்டுலும் நாட்டலும் நெறைய மக்கள் இருக்காங்க. அவங்ககூடப் பேசணும் பழகணும் அதுக்கு ஒருத்தர் நெனக்கறத அடுத்தவங்களுக்குச் சொல்லணும். அதுக்கு நான் வேணும்'' வாயும் சண்டையில் சேந்திச்சு.

"என்ன எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்களா, யார் பெரியவன்ணு முடிவு பண்றதுக்கு எதுக்கு இத்தனை தூரம் பேசணும். இப்ப நான் ஒரு நிமிஷம்
வேலைநிறுத்தம் செய்யப்போறேன். அப்ப உங்க நெலம என்னாகுதுண்ணு பாருங்க'' அப்படிண்ணு சொல்கிட்டே மூக்கு சுவாசிக்கறத ஒரு நிமிஷம் நிறுத்திச்சு. அவ்வளவுதான்.

ரவிக்கு மூச்சு முட்டியது. கைகளை படபடணு அடிச்சான். கால்களை மேலும் கீழும் ஆட்டினான். இமைகள் படபடண்ணு அடிச்சுச்சு. ஒடம்பு வில்லு மாதிர வளஞ்சுது. "ஐயோ... வேண்டாம் வேண்டாம். நாங்க எல்லாம் சண்டையை நிறுத்திட்டோம். நீ தான் பெரியவன். நீதான் பெரியவன். நாங்க ஓத்துக்கறோம்'' எல்லாரும் ஒரே குரல்ல சொன்னாங்க.

இங்க பாருங்க... இனி நான் பெரியவன் நீ பெரியவன்ணு சண்டை போட்டீங்க. நான் ஒரேடியாக வேலை நிறுத்தம் செஞ்சிருவேன். எல்லாரும் பெரியவங்கதான். கை செய்யற வேலையைச் காது செய்ய முடியாது. கண் செய்யற வேலையை கால் செய்ய முடியாது. காது செய்ய வேலையை என்னாலெ செய்ய முடியாது. அதனாலெ அவங்வங்க வேலைகளை ஒழுங்கா செய்தா ரவியால சுகமா இருக்க முடியும். ரெவி சுகமா இருந்தா நாமளும் நல்லா இருக்க முடியும்'' அப்படீண்ணு மூக்கு சொல்லிச்சு.

மூக்கு சொன்னதை எல்லாரும் ஒத்துகிட்டாங்க. எல்லோரும் அவங்கவங்க வேலையைச்செய்யத் தொடங்கினாங்க.

ரவி கண்விழிச்சான். வழக்கமா செய்யற வேலைகளைச் செய்யத் தொடங்கினான். உடல் ஊறுப்புகளோட சண்டை அவனுக்கு ஒரு கனவு மாதிரி இருந்திச்சு.

No comments:

Post a Comment