Ads Here

Wednesday, May 2, 2018

காகம் பசு சவாரி

Image result for காகம் பசு சவாரி


இப்பத்தான் மழைக்காலம் முடிஞ்சிருக்கு. வானத்திலிருந்து மேகம் வெலகிருந்துச்சு இத்தனை நாள் என்னால பூமியெ பாக்கமுடியாம இந்த மேகம்
தடுத்திருந்தது. இப்ப வெலகிருச்சு. அதனால சந்தோஷமான சூரியன் நல்லா கண்ணைத் தொறந்து பூமியை பாத்துச்சு. நெல்ல வெயில் ஆனா வயல்
வெளியெல்லாம் தண்ணீ நெறஞ்சிருந்திச்சு. வயல் வரப்பில நல்ல பசுமையா புல்லு தழஞ்சிருந்தது. அந்த வயல் வரப்பில ஒரு பசு புல்லு மேஞ்சிட்டிருந்துச்சு.

வானம் தெளிஞ்சதுனாலே பறவைககளும் வானத்திலே வட்டமிட்டுப் பறந்திட்டிருஞ்சுக. அவங்கள்ல நம்ம காக்காவும் இருந்துச்சு.

சிறகுகளை அசைச்சு அசைச்சு பறக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. சிறகுகளை ஆசைக்காம ஜாலியா மெல்லமா சவாரி செய்யறதுக்கு என்ன வழிண்ணு காக்கா கீழே பாத்துச்சு. அப்ப ஒரு பசு புல் மேஞ்சிட்டிருந்தது. அது ஒரு ஏடத்தில புல்லு மேஞ்சிட்டு அடுத்த இடத்துக்கு மெதுவாகப் போச்சு . அங்க புல் மேயத் தொடங்கிச்சசு. ஆகா இதுதான் சரியான வழி பேசமா பசுவோட முதுகில உட்காந்துகிட்டா ஜாலியாக இருக்கும்ணு நெனச்சுது. நேராக பசுவோட முன்னாடி போய் நின்னுச்சு.

பசுவே பசுவே காக்காயைக் கண்டுக்கவேயில்ல. காக்கா கா கா ண்ணு கத்திச்சு. அப்பவும் பசு அதக் கவனிக்கவேயில்ல. இதுகிட்ட நமக்கென்ன பேச்சுண்ணு புல்மேயறதுலேயே கண்ணா இருந்துச்சு.

நான் உன்னோட முதுகிலே ஏறி உக்காரப் போறேண்ணு சொல்லிட்டு பசுவோட முதுகிலே ஏறி உக்காந்துச்சு. அவ்வளவு பசுவுக்கு வந்ததே கோபம். அது வாலச் சுழற்றி அத வெரட்டி விட்டிருச்சு. அது பலதடவை முயற்சிபண்ணுச்சு. ஒவ்வொருதடவும் பசு அது வெரட்டி வெரட்டி விட்டுச்சு.

இப்ப என்ன பண்றது காகம் யோசிச்சது. அதோட மனசுல ஒரு திட்டம் தோன்றிச்சு. அது நேரா பசுவோ முகத்துக்கு நேராப் போயி "நீ உன் முதுகில சவாரி செய்ய ஒத்துக்கமாட்டேங்கற. ஆனா எனக்கு உன் முதுகிலே சவாரி செய்யணும்ணு ரொம்ப ஆசையாவும் இருக்கு. அதனாலெ நமக்கிடையே ஒரு போட்டி வச்சுக்குவோம்.

அந்தப் போட்டியில நீ ஜெயிச்சா நான் உன் மேலெ உக்கார மாட்டேன். ஆனா நான்ஜெயிச்சா ஊம்மேல சவாரி செய்ய நீ ஒத்துக்கணும் சரியா? அப்படீண்ணு கேட்டுச்சு.

பசு முதல் தடவையா காக்கா ஏரெடுத்துப் பாத்துச்சு. இத்துணூண்டு இருந்துட்டு இது நம்ம போட்டிக்குக் கூப்பிடுது. என்கிட்டே சவால் விடுது. ஒரு கை
பாத்துருவோம் அதோட இந்தக் காக்காயோட தொல்லை தீருமே அப்படீண்ணு நெனச்சிட்டு என்ன போட்டி சொல்லுணு கேட்டிச்சு.

நீ மேஞ்சிட்டிருக்கிற வயல்வரப்பு கீழே இருக்கு. இந்த வயல்ல தண்ணீ இருக்கு. இதுக்கு கொஞ்சம் மேலாக அந்த வயல் இருக்கு பாரு. அதுலயும் தண்ணீ இருக்கா. நான் மேலே இருக்கற வயல் எடுத்துக்கறேன். நீ கீழே இருக்கற வயலை எடுத்துக்கோ. ரெண்டுலயும் தண்ணீ இருக்கல்ல. இந்த வயல்ல இருக்கற தண்ணியெ முழுசும் குடிக்கணும் வயல் வத்திப்போகணும் யாரோட வயல் மொதல்ல வத்திப் போகுதோ அவங்கதான் ஜெயிச்சவங்க... இதுதான் போட்டி சரியா அப்படீண்ணு சொல்லிச்சு.

இந்தச் சின்ன காக்கா எப்படி ஒரு வயல் நெறய இருக்கற தண்ணியெ குடிக்கப்போகுது அப்படீண்ணு நெனச்சுகிட்டு. சரி ஒத்துக்கிறேன்ணு சொல்லிட்டு
தண்ணியெ குடிக்க ஆரம்பிச்சது. காக்காவும் மேல இருக்கிற வயலுக்குப் பறந்து போய் தண்ணியெ குடிக்கற மாதிரி நடிச்சுது. அப்புறம் அது என்ன பண்ணிச்சு தெரியுமா? மேல இருக்கற வயலோட வரப்பில ஒட்டை போட ஆரம்பிச்சுது. அலகால வரப்பைக் குத்திக் குத்தி சின்னச்
சின்ன ஓட்ட போட்டுச்சு ஒண்ணு ரெண்டு ஒட்டையல்ல ஒன்பது ஒட்டை போட்டுச்சு. அதனாலெ என்னாச்சு மேலயிருக்கற வயலில்ருந்து
தண்ணீ கீழே பாத்து ஒழுகத் தொடங்கிச்சு.

கீழே இருக்கற பசுவோ தண்ணீ குடிக்குது குடிக்குது ஆனா வயல் வத்தவே மாட்டேங்குது என்னடா இது அதிசயமா இருக்கிதேண்ணு தலையைத் தூக்கி மேல பாத்தா வயல் வரப்பிருந்து தண்ணி ஒழுகு கீழ் வயலுக்கு வருது.

ஏய் காக்கா. நீ என்ன ஏமாற்றிட்டே. நான் இத ஒத்துக்க மாட்டேண்ணு சொல்லிச்சு.

"இங்க பாரு மேல இருக்கற வயல் வத்திப் போயிருச்சு'' அதனாலே நான்தான் ஜெயிச்சேன் சொல்லிச்சு.

நான் உன் முதுகுமேல உக்காருவேன் அப்படீண்ணு சொல்லிட்டு பசுவோட முதுகுமேல உக்காரப் போச்சு. ஆனா பசுவிடலே அது வாலால
காக்காயை வெரட்டிச்சு. அப்படி வெரட்டும்போது காக்கா கொஞ்சம் மேல பறக்கும் அப்புறம் மறுபடியும் பசுவோட முதுகில உக்காரும்.

நீங்க ஏங்கயாவது ஒரு பசு மேஞ்சிட்டிருக்கிறத பாருங்க. அதுக்குப் பக்கத்தில ஒரு காக்கா இருக்கும். அது பசுவோட முதுகில உக்காந்து சவாரி பண்ண முயற்சி செய்யும். பசு வாலைச் சுழற்றி அது வெரட்டும்.

No comments:

Post a Comment