Ads Here

Wednesday, May 2, 2018

இறைவன் தந்த வரம்


Image result for இறைவன் தந்த வரம்

வாசுகிக்குக் கதை கேட்கறதுண்ணா கொள்ளப்பிரியம். தெறந்த வாய் மூடாம கதை கேட்பா. அம்மா மடியிலெ தல வச்சுப்படுத்துக்கிட்டு கதை கேட்டுக்கிடேட் தூங்கறதுண்ணா அவ்வளவு புடிக்கும். அம்மா இல்லாட்டி பாட்டி கிட்டே கத கேட்பா... நாளும் ரெண்டு மூணு கத கேட்காட்டி வாசுகிக்குத் தூக்கமே வராது.

கதயிலே வர்றவங்கள மாதிரியே தன்னையும் கற்பனைப் பண்ணிப் பார்த்துக்குவா.

அம்மாவும் பாட்டியும் சொல்ற கதையிலெ வர்றவங்க எல்லாம் எதுக்கோ ஒண்ணுக்கு ஆசைப்படுவாங்க. அது கெடைக்கிறதுக்காக தவம் செய்வாங்க. கடவுள் அவங்க முன்னாடி வந்து "பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள்" ணு சொல்லவாரு அவங்களும் வரம் கேட்பாங்க. கடவுள் வரம் கொடுப்பாரு. அவங்க ஆசைப்பட்டது அவங்களுக்கு கிடைக்கும். அவங்க சந்தோஷமா இருப்பாங்க...

"ஐ.. நாமளும் அப்படி கடவுள்கிட்ட கேட்டா கடவுள் என்ன கொடுக்கவா மாட்டாரு.. தவம் செஞ்சுதான் பார்ப்போமே" அப்படீண்ணு அவளோட மனசுலெ ஆசை மொளச்சுது.

அடுத்தநாள் அவளும் தவம் செய்யத் தொடங்கினா. கடவுள நெனச்சா, கடவுள மட்டும் நெனச்சா.. நெனச்சுகிட்டே இருந்தா. தூங்காம திங்காம நெனச்சா...

ஒடம்பு இளச்சுது. கைகாலெல்லாம் வலிச்சுது. இருந்தாலும் விடாம கடவுளயே நெனச்சா... நிமிஷம் மணிக்கூராச்சு, மணிக்கூர் நாளாச்சு, நாளு வாராமாச்சு, வாரம் மாசமாச்சு.. ஆறு மாசமாச்சு, வாசுகி தவம் செய்யற செய்தி கடவுளுக்கு எட்டுச்சு. கடவுள் பொறப்பட்டு வந்தாரு.

வாசுகியோட முன்னாலே வந்து நின்னாரு. "பக்தயெ உன் தவத்தை யாம் மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்''  அவரு மாட்டிக்கப் போற விஷயம் அவருக்குத் தெரியாமல் கேட்டாரு.

வாசுகி கடவுள பாத்தா. ஆகா இதுதான் அருமையான வாய்ப்பு. இது கெட்டியாப் புடிச்சுக்கணும். எல்லாத்தையும் கேட்டரணும் அப்படிண்ணு மனசிலெ நெனச்சுகிட்டு நான் என் ஆசையைச் சொல்றேன் கேட்டுக்குங்க.. அப்படீண்ணு கடகடண்ணு சொல்ல ஆரம்பிச்சுட்டா...

ஆழ்கடலுக்குள்ளோ போகணும்
அண்டவெளியைச்சுற்றி வரணும்
கடந்த காலத்துக்கு போகணும்
எதிர்காலத்துக்கும் போகணும்
இறந்தவங்க கிட்டே பேசணும்
பொறக்கறவங்கிட்டேயும் பேசணும்
மரத்துக்குள்ளே போகணும்
மனுஷங்களுக்குள்ளேயும் போகணும்

ஆனா எல்லாத்துக்கும் ஒவ்வொரு கருவியாத் தந்திராதீங்க. எல்லாம் செய்யற ஒரே ஓரு கருவியைத் தாங்க" அப்படீண்ணா....

வாசுகியோட ஆசையைக் கேட்டுக் கடவுளுக்கே தலை சுத்தியிருக்கும். "பக்தயே, உன் ஆசை பேராசை. ஆனாலும் நீ தவம் செய்தவளாயிற்றே. ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியாதே... இரண்டு நாள் பொறுத்துக்கொள். நான் யோசிக்க வேண்டும்'' என்று சொல்லிமறஞ்சு போனாரு.

போனவரு யோசிச்சாரு.. யோசிச்சாரு.. ரூம்போட்டு யோசிச்சாரு. ரெண்டு நாளக்கு அப்புறம் வந்தாரு.

"வாசுகி கையை நீட்டு. கண்ணை மூடிக்கொள். உன் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் அற்புதக் கருவியைக் கண்டுபிடித்து வந்துள்ளேன். அதை உனக்குத் தருகிறேன். அந்தக் கருவியை நன்கு பயன்படுத்தினால் நீ என்னவிடவும் பெரியவளாகி விடுவாய்'' என்றார்.

வாசுகி கண்ணை மூடினா, கையை நீட்டினா...

கடவுள் அவள் கையில் அந்த அற்புதமான கருவியை வச்சார். மாயமாய் மறஞ்சாரு.

வாசுகி கண்ணத் தொறந்து பாத்தா...

அண்ட வெளியில் பறக்க வைக்கிற, ஆழ்கடலுக்குள்ள போக வைக்கிற. இறந்தவங்க கிட்ட பேச உதவுற, எதிர்காலத்தை இப்பவே பாக்ற அந்த அற்புதமான கருவி எது தெரியுமா?

அதுதான் புத்தகம். வாசுகி புத்தகம் வாசிக்கத் தொடங்கினா. நல்ல வாசகி ஆனா

No comments:

Post a Comment