Ads Here

Thursday, October 31, 2019

சிட்டுக்குருவியின் கதை || Tamil stories for kids


 குருவிகளும் குஞ்சுகளும்




கோதுமை வயலின் நடுவே குருவி ஒன்று கூடு கட்டி
முட்டைகள் இட்டு அடை காத்தது. சில நாட்களில் குஞ்சுகள்
வெளிவந்தன. தன் குஞ்சுகளைக் கண்ணுக்குள் வைத்து
வளர்த்தது குருவி. தினமும் காலை வேளையில் குருவி இரைதேடி
வெளியே செல்லும். குஞ்சுகள் வயலில் விளையாடிக்
கொண்டிருக்கும்.



ஒருநாள் வழக்கம்போல குஞ்சுகள் விளையாடிக்
கொண்டிருந்தன. அப்போது வயலுக்குச் சொந்தக்காரனான
விவசாயியும் அவனது பிள்ளைகளும் வந்தார்கள்.
விவசாயி தன் பிள்ளைகளிடம், “அறுவடைக்கு நேரம்
வந்துவிட்டது. நமது சொந்தக்காரர்களையும் நண்பர்களையும்
சீக்கிரமே கூட்டிவந்து அறுவடை செய்துவிட வேண்டியதுதான்!”
என்று கூறினான். பிள்ளைகளும் தலையசைத்தனர்.
அதைக்கேட்ட குருவிக் குஞ்சுகள் அச்சம் கொண்டன.
தாய்க் குருவி வந்ததும் அதனிடம் நடந்தவற்றைக் கூறின. “நாம்
இங்கிருந்து சென்று விடுவோம்” என்றும் கூறின.
“குழந்தைகளே பயப்படாதீர்கள்! நாம் இங்கிருந்து செல்ல
வேண்டிய நாள் இன்னும் வரவில்லை!” என்றது தாய்க் குருவி.
அது சொன்னது போலவே அடுத்த நாளோ, அதற்கடுத்த
நாளோ அறுவடைக்கு ஆட்கள் வரவில்லை. சில நாட்கள் கழிந்தன.

For English click here

பகலில் விவசாயி மீண்டும் தன் பிள்ளைகளோடு வயலுக்கு
கொன், காற்று அடிக்கத் தொடங்கியிருந்ததால் கோதுமை
மணிகள் வயல்வெளி முழுவதும் சிதறியிருந்தன.
அதை பிள்ளைகளிடம் காட்டிய விவசாயி, "இனிமேலும்
காமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும். யாரையும்
எதிர்பாராமல் நாளையே நாம் வந்து அறுவடை செய்துவிடலாம்"
என்றான்.



தாய்க்குருவி வந்ததும் நடந்தவற்றை குஞ்சுகள் கூறின.
அதைக்கேட்ட தாய்க்குருவி, "அப்படியானால் நாம் உடனே
இங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்பொழுது
பிறரை நம்பாமல் தானே வேலையைச் செய்யத் தீர்மானித்து
விட்டானோ அதன்பிறகு தாமதம் இருக்காது." என்று கூறியது.
உடனே தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து
சென்றது.

நீதி, பிறரைச் சார்த்திருப்பவர்கள் நேரத்தையும்
பலன்களையும் இழக்கிறார்கள்,

No comments:

Post a Comment