Ads Here

Wednesday, May 2, 2018

போட்டி வச்சா இப்படியிருக்கும்


Image result for போட்டி வச்சா இப்படியிருக்கும்

இப்போ என்ன பண்றது? அந்த பிஸ்கட் கம்பனியோட தலவரு யோசிச்சாரு.

கடைகள்ல இதுவரைக்கும் அவரோட பிஸ்கட் நல்லா வித்திட்டிருந்தது. இப்போ விற்பனை ரொம்ப ரொம்ப கம்மியாயிட்டே வருது. காரணம் புதுசா ஒரு பிஸ்கட் வந்திருக்கு. அதுவும் வட்ட வடிவமா, அதிலெ ஒரு முந்திரிப்பருப்ப வச்சு. டிசைன் எல்லாம் போட்டு அழகாக இருக்கு.

நம்ம கம்பனி முதலாளியும் அந்த கம்பனி பிஸ்கட்டை வாங்கினாரு. எப்படி இருக்குண்ணு தெரிஞ்சுக்கத்தான் அதை வாங்கினாரு. வெலயும் கொஞ்சம்
கம்மியாத்தான் இருந்திச்சு.

பிஸ்கட்டு பொட்டலத்தைப் பிரிச்சாரு. நல்ல மணம் மூக்கில் ஏறியது. சாப்பிட்டுப் பாத்தாரு. நல்லாத்தான் இருந்திச்சு. நாம் புதுசா எதாவது செய்யாமிருந்தா கம்பனியை இழுத்து மூடிட வேண்டியதுதான். அவருக்கு ஒரே கவலையாப்போச்சு.

அடுத்த நாள் அவரு தன்னோட கம்பனியில பிஸ்கட் உண்டாக்கறவங்களையெல்லாம் கூப்பிட்டாரு.

"இங்க பாருங்க, நம்ம பிஸ்கட்டோட விற்பனை ரொம்ப கம்மியாயிருச்சு. நம்ம எதாவது செய்யணும். புதிய சுவைல, புதிய பிஸ்கட் உண்டாக்கணும். ஒரு வாரத்திற்குள்ள எனக்கு புதிய சுவைல புதிய வடிவத்திலே பிஸ்கட் உண்டாக்கித் தரணும். இல்லேண்ணா உங்களோட சேந்து நானும் வீட்டில போய் சும்மா இருக்க வேண்டியதுதான்.'' அப்படீண்ணாரு.

வேலைக்காரங்களும் "கண்டிப்பா முயற்சி பண்றோம்ணாங்க'' அப்படீண்ணு சொல்லிட்டு புதிய பிஸ்கட்டுகள செய்யறதைப் பத்தி யோசிச்சாங்க. ஒரு வாரம் ஓடிருச்சு. கம்பனி மொதலாளி ரொம்ம எதிர்பார்ப்போட கம்பனிக்கு வந்தாரு.

வேலைக்காரங்க நாலஞ்சு புதிய பிஸ்கட்டுகள கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா மொதலாளிக்கு அந்தப் பிஸ்கட்களை பாக்கவே பிடிக்கல. நெறம் மங்கலா இருந்திச்சு.

வடிவமும் சரியா அமையல. அப்புறம் பிஸ்கட்டத் திண்ணு பாத்தாரு. புதிய சுவையாக அவருக்குத் தோணலே. அவரு ரொம்ப எதிர்பாத்து வந்தாரு ஆனா ஏமாந்திட்டாரு.

இனி என்ன செய்யலாம்னு தீவிரமா யோசிச்சாரு. பிஸ்கட் உண்டாக்கறவங்களுக்குத் திறமை இருக்கு. ஆனா அதை நல்ல பயன்படுத்தத் தெரியல.
நாலஞ்சு நாளா யோசிச்சாரு. இருக்கறவங்கள மாத்தி வேற புது ஆளுகள வச்சா எப்படியிருக்கும்ணு யோசிச்சாரு. புது ஆளுங்க எப்படி இருப்பாங்கணு தெரியாது.

அவங்கள முழுசா நம்பவும் முடியாது. கடைசிலெ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய அதுவும் இல்லே இதவும் இல்லேண்ணாயிரும்ணு நெனச்சு அந்த யோசனை கைவிட்டாரு.

அப்புறம் நாலஞ்சு நாளா யோசிச்சாரு. பிஸ்கட்டு உண்டாக்கறவங்களுக்குள்ளே ஒரு போட்டி வச்சா எப்படி இருக்கும். யாரு நல்லசுவையா சூப்பரா பிஸ்கட் உண்டாக்கறாங்களோ அவங்களுக்கு ரெண்டு லச்ச ரூபா பரிசு கொடுக்கலாம்.

அப்படீண்ணு நெனச்சாரு.

அடுத்த நாளு அதை பிஸ்கட் உண்டாக்கறவங்க கிட்ட சொல்லவும் செஞ்சாரு.

அங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமாச்சு. அதுவரைக்கும் எல்லாரும் புது பிஸ்கட் உண்டாக்கற முறையை, அவங்க நெனக்கறத அடுத்தவங்ககிட்ட சொல்லி ஆலோசனை கேட்டுச் செய்தாங்க. அதனாலெ பிஸ்கட் நல்லாயில்லேண்ணா எல்லோருக்கும் தானே பொறுப்பு.  அப்படீன்னு நெனச்சிட்டு அதிக அக்கறையெடுக்காம இருந்தாங்க.

போட்டி வந்தபோது வேறு பிரச்சனை வந்திச்சு. ரொம்ப தீவிரமா யோசிச்சாங்க.  ஆனா ஒருத்தர் யோசிக்கற திட்டத்தை அடுத்தவங்க கிட்ட சொல்லாம மறச்சாங்க. மட்டுமல்ல, மத்தவங்க ஜெயிக்கக் கூடாது. பரிசு எனக்கே கிடைக்கணும்ங்கற மாதிரியான கெட்ட எண்ணங்களும் தோணிச்சு.

அந்தக் கம்பனிலெ ரமேஷ்ங்கறவர எல்லாருக்கும் புடிக்கும். உண்மைல அவருதான் தலைமைச் சமையல்காரர் மாதிரி. ஒவ்வொரு முறையும் மாவு கலக்கனது, சக்கர போட்டது, மணத்துக்கான கலவையைக்கலந்து எல்லாம் சரியாக இருக்காண்ணு பாக்கறவரு அவருதான். அதனால இந்தப் பரிசுத்தொகை அவருக்குக் கெடைக்குறதுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்குண்ணு எல்லாரும் நெனச்சாங்க.

இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவங்களுக்குங்கத் தெரிஞ்சமாதிரி பிஸ்கட் உண்டாக்கி போட்டிலெ கலந்துக்கலாம்ணு முடிவு செஞ்சாங்க. ஆனா சந்திர மூர்த்தி மட்டும் அந்தத்தொகை தனக்கே கெடக்கணும் அப்படீண்ணு நெனச்சாரு. அதுக்கு என்ன பண்ணலாம்ணு யோசிச்சாரு. மனசில ஒரு திட்டம் உதிச்சது. அந்தத் திட்டப்படி எல்லாம் நடக்கறதாகவும் ரெண்டு லச்ச ரூபாத் தனக்குக் கெடக்கறதாகவும் நெனச்சு சந்தோஷப்பட்டாரு.

அவரு பிஸ்கட் உண்டாக்கற நாள்ல ரமேஷுக்குப் பக்கத்து மேசையைத் தேர்ந்தெடுத்தாரு .ரமேஷ் எந்தளவுக்கு மாவு எடுக்கிறாரு , என்னென்ன
பொருளையெல்லாம் மாவுலெ கலக்குறாரு, அப்படீங்கறதெல்லாம் பாத்துட்டு அதே மாதிரி அவரும் செய்தாரு. ரமேஷ் அதைக்கவனிக்கவே இல்லை. இப்படிக் கலக்கணத ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கணும் அப்போத்தான் மாவுலே எல்லாம் நல்லா புடிக்கும். அதனாலெ கலக்கன மாவை அப்படியே வச்சிட்டு எல்லாரும் வேற வேற வேலைகளப் பாக்கப்போயிட்டாங்க. அந்த நேரம் பாத்து சுந்தர மூர்த்தி ஒரு கை உப்பை அள்ளி ரமேஷ் கலக்கி வச்சா மாவிலே யாருக்கும் தெரியாம தூவிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி வேலை செஞ்சிட்டிருந்தாரு.

அடுத்த நாள் அவங்வங்க கலக்கி வச்ச மாவில பிஸ்கட் பண்ணினாங்க. கம்பனி மொதலாளி வந்தாரு. பிஸ்கட்ட சாப்பிட்டுப் பாத்தாரு. ரமேஷோட பிஸ்கட்டைச் சாப்பிட்டாரு. "ஆகா... அருமையாக இருக்கு. இதுவரைக்கும் யாரும் இப்படியொரு பிஸ்கட்டை உண்டாக்கவே இல்லை. இனிப்புக்கு இனிப்பு, உப்புக்கு உப்பு. பாதிக்குப் பாதி. "ரமேஷ் உங்களுக்குத்தான் அந்தரெண்டு லச்சம். மட்டுமல்ல அடுத்த மாசத்திலேர்ந்து சம்பளமும் கூட்டித்தர்றேன்'' அப்படீண்ணாரு

சுந்தர மூர்த்திக்கு அப்படியே ஒடைஞ்சு போய் உக்காந்திட்டாரு. அவரும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுப் பாத்தாரு. அட ஆமா நல்லாத்தான் இருக்கு. ஒரு பிடி உப்பைப் போட்டாலும் போட்டேன். என்னோட மாவிலயே போட்டிருக்கலாம்.

ரமேஷ்க்குக் கெடைக்கக் கூடாதுண்ணு நெனச்சுப் போட்டேன். ஆனா பரிசும் கெடச்சது, அதிக சம்பளமும்கெடகக்குது.

தன்னோட தலையிலே தானே மண்ண வாரி போட்டது மாதிரியாருச்சுண்ணு நெனச்சாரு சுந்தரமூர்த்தி.

No comments:

Post a Comment